விஜய்யை இயக்கும் சிவா?
ஜூன் 03, 2022
Advertisement
நடிகர் விஜய் ‛பீஸ்ட்" படத்தினை தொடர்ந்து தற்போது தெலுங்கில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்து இன்று முதல் சென்னையில் துவங்கி உள்ளது. தீபாவளி வெளியீடாக இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக விஜய்யை அவரது இல்லத்தில் சிவா சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது சிவாவிடம் தனக்கு ஒரு கதை எழுதுமாறு விஜய் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அஜித், ரஜினி ஆகியோரை இயக்கியுள்ள சிவா இதன்மூலம் விரைவில் விஜய் உடனும் இணையலாம் என கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!