முத்தையா இயக்கத்தில் கமல்? தேவர் மகன் பார்ட் 2?
மார் 09, 2022
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து அவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த இந்தியன் 2 படத்தை விட்ட இடத்திலிருந்து தொடர விரும்பினாலும் தற்சமயம் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் படத்தில் பிசியாக இருப்பதால் அதற்கு உடனடி சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில்தான் இயக்குனர் முத்தையா டைரக்ஷனில் கமல் நடிக்க இருக்கிறார் என ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கமலை சந்தித்து கதை சொன்னதாகவும், முத்தையா சொன்ன கதை கமலுக்கு பிடித்துபோய் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் கூட சொல்லப்படுகிறது.
குட்டிப்புலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான முத்தையா கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கார்த்தியை வைத்து விருமன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. முத்தையாவின் படங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றியே உருவாகி வருவதால் இவருடன் கமல் கூட்டணி சாத்தியமாகுமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்கள். அதேசமயம் கமல் இதே பாணியில் தேவர்மகன் என்கிற படத்தை கொடுத்தவர் தான். ஆகவே இது தேவர் மகன் பார்ட் 2 ஆக கூட இருக்கலாம்.. அதனால் இருவரது எண்ண ஓட்டமும் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!