
‛வைல்டு லைப் போட்டோகிராபராக நடிக்கும் சிவராஜ்குமார்
இந்நிலையில், கார்த்திக் ராஜூ இயக்கும் "Welcome to wild life" என்ற படத்தில் நடிக்கிறார். அவர் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திருடன் போலீஸ், தெலுங்கில் சந்தீப்கிஷன் நடித்த நினு வீதனி நீ தானு நேனே சமீபத்தில் வெளியான சிங்கிள் " உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கிறார். வைல்டு லைப் போட்டோகிராபராக அவர் இந்த படத்தில் நடிக்கிறார். படம் தமிழிலும் வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!