
பிளாஷ்பேக் : கைவிடப்பட்ட எம்ஜிஆர் - இளையராஜா இணைந்த படம்
பிரசாத் ஸ்டூடியோவில பாடல் பதிவுடன் படத்தின் பணிகள் தொடங்கியது. இதில் எம்ஜிஆர் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். "படிக்கிறேன்.. நான் படிக்கிறேன் இந்த உலகை நான் படிக்கிறேன்" என்ற பாடலுடன் பணி தொடங்கியது.
இந்த பாடலை டி.எம்.சவுந்தர்ராஜன் பாடினார். ஆனால் அது எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை. வேறு யாரையாவது பாட வையுங்கள் என்று கூறிவிட்டார். டிஎம்எஸ் கோபித்துக் கொள்வார் என்று இளையராஜா சொன்னபோது நான் சொன்னேன் என்று சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். பின்னர் அதே பாடல் மலேசியா வாசுதேவன் குரலில் உருவானது. அதுவும் எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை. "நீயே பாடு" என்று இளையராஜாவிடம் கூறிவிட்டார். எனது குரல் உங்களுக்கு பொருந்தாது என்று இளையராஜா எவ்வளவோ கூறியும் எம்ஜிஆர் கேட்கவில்லை. பின்னர் இளையராஜாவே அந்த பாடலை பாடினார்.
ஆனால் எம்ஜிஆர் அரசியலில் பிஸியானதால் படத்தை கைவிட்டு விட்டார். இதனால் எம்ஜிஆர் படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை இளையராஜா இழந்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…