சென்னை தெருவிற்கு தேவா பெயர் : அமைச்சரிடம் ஸ்ரீகாந்த் தேவா கோரிக்கை
நவ 21, 2026
Advertisement
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொண்டு தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
மேலும், தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் "Deva The Tribute" என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், வன்னி அரசு மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன், நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, மற்றும் இயக்குநர் பி. வாசு, ராதாரவி, பாண்டியராஜன், ஹிப் ஹாப் ஆதி, டி. இமான், ராமராஜன், வைரமுத்து, பா. ரஞ்சித், நடிகர் சவுந்தர் ராஜா நடிகர் ஜெய், ஓய். ஜி. மகேந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, ‛‛தேவாவிற்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அவர் வாழ்ந்த பத்மநாபன் தெருவிற்கு அவரது பெயர் வைக்க வேண்டும். அவர் பிறந்த நவ., 20ம் தேதியை கானா தினம் என்று அறிவிக்க வேண்டும்"" என அமைச்சர்கள் முன்னிலையில் கோரிக்கையாக வைத்தார்.
தேவா உறவினர் என்றாலும் அவர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இளையராஜா வரவில்லை. தனக்கு நெருக்கமானவர் மறைவிற்கு வருவதில்லை என இளையராஜா ஒரு விளக்க வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் நேற்று நடந்த தேவா பிறந்தநாள் விழாவில் இளையராஜா கலந்து கொண்டு அவர் படத்தை திறந்து வைத்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…