
செப்.,16ல் வெளியாகும் சினம்
ஆக 26, 2022
Advertisement
ஹரி இயக்கத்தில் நடித்த யானை படத்திற்கு பிறகு ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் சினம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். பாலக் லால்வாணி என்பவர் நாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைகள் உருவாகியுள்ள இந்த படத்தில் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நெஞ்செல்லாம் என்ற பாடலின் முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதை தனது சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கிறார் அருண் விஜய். அதோடு சினம் படம் செப்டம்பர் 16ம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!