
ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி பரிமாறிய சிம்பு
இதன் காரணமாக தனது ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகிகளை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு தன் கையாலேயே ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடையே பேசிய சிம்பு “மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்துங்கள், மக்களுக்கு நிறைய சமூக சேவைகள் செய்து அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். அப்போதுதான் நமது எதிர்கால திட்டமிடலுக்கு அது சாதகமாக இருக்கும். பட வெளியீட்டின்போது எந்த பணி செய்தாலும் பாதுகாப்பை முக்கியமாக கருதுங்கள்” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!