சிம்பு, அஸ்வந்த் மாரிமுத்து கூட்டணியில் புதிய படம்
செப் 27, 2024
Advertisement
கடந்த 2020ம் ஆண்டில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் " ஓ மை கடவுளே" . இதன் பிறகு நடிகர் சிலம்பரசனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டது. அதன்பிறகு ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாக சொன்னார்கள்.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் வைத்து " டிராகன்" எனும் படத்தை இவர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!