
போட்டோ, வீடியோ சட்டவிரோத பயன்பாடு : 15 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஸ்ருதிஹாசன் வழக்கு
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து ஆபாசமான முறையில் புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்படுகிறது. எனது அனுமதியின்றி பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி இணையத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுகிறது. இந்த நிறுவனங்களிடமிருந்து தனக்கு 15 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும்" என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் மனுவோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பட்டியலையும் தாக்கல் செய்திருக்கிறார்.
இதேபோன்று நடிகை தபுவும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு டில்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நடிகை தபு தொடர்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரெட்டிட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அவதூறு உள்ளடக்கங்கள், புகைப்படங்கள் காணொளிகளை உடனடியாக நீக்க உத்தரவிட்டது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!