வேள்பாரி படத்திற்கு தயாராகவுள்ள ஷங்கர்
ஜன 04, 2025
Advertisement
இயக்குனர் ஷங்கர் இந்தியளவில் பிரமாண்டமான இயக்குனர் என கொண்டாடபடுபவர். கடைசியாக அவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த "இந்தியன் 2" படம் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை தந்தது. அதன்பிறகு ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி உள்ள "கேம் சேஞ்சர்" படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் கலந்து கொண்டபோது அவரின் அடுத்த படம் பற்றி கேள்வி எழுந்த போது அவர் கூறியதாவது, "வேள்பாரி நாவலை படத்திற்கான திரைக்கதையாக முழுவதுமாக தயார் செய்து வைத்துள்ளேன். தற்போது முன் தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும். அதிகாரப்பூர்வமான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என கூறினார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!