
சேத்துமான் படம் ஓடிடியில் வெளியாகிறது
மே 23, 2022
Advertisement
எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவர் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை ‛சேத்துமான்" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். தமிழ் என்ற புதியவர் இயக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள மாசற்ற அன்பை பேசும் படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் தாத்தா வேடத்தில் மாணிக்கமும், பேரன் வேடத்தில் அஸ்வினும் நடித்திருக்கிறார்கள். பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படம் புனே சர்வதேச திரைப்பட விழா மற்றும் கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. அதோடு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருது பெற்றது. இந்நிலையில் இந்த படம் மே 27ல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…