
தாதா சாகேப் பால்கே விருது பற்றி செல்வராகவன் திடீர் பதிவு
மார் 10, 2024
Advertisement
இந்தியத் திரையுலகத்தின் சாதனையாளர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது "தாதா சாகேப் பால்கே விருது". 1969 முதல் இந்த விருது வழஙகப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவுடன் தொடர்பு கொண்டவர்களில் “எல்வி பிரசாத், பி நாகிரெட்டி, நாகேஸ்வரராவ், சிவாஜிகணேசன், டி ராமாநாயுடு, கே பாலசந்தர், கே விஸ்வநாத், ரஜினிகாந்த்,” ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் எக்ஸ் தளத்தில், “பின் வருபவர்கள் எப்போதோ தாதா சாகேப் பால்கே விருதுகளை வாங்கியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. பி. சுசீலா, எஸ் ஜானகி, எஸ்பி பாலசுப்பிரமணியம், கேஜே யேசுதாஸ், இளையராஜா, ஏஆர் ரஹ்மான்…அவர்களில் சிலர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!