மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சதீஷ் : இன்னொரு ஹீரோ ஆதி சாய்குமார்
டிச 22, 2025
Advertisement
குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புது படம் ஜனவரி 26 முதல் தொடங்குகிறது. ஜிப்ரான் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் வித்தியாச கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறது.
கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து "கூகுள் குட்டப்பா" படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இரண்டு ஹீரோ கொண்ட இந்த படத்தில், கான்ஜூரிங் கண்ணப்பன்", "சட்டம் என் கையில்" போன்ற படங்களுக்குபின் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஆக்ஷனுக்கு மாறுகிறார்
இந்த படத்தின் மூலம் மற்றொரு கதாநாயகனாக, பிரபல தெலுங்கு நடிகர் சாய்குமாரின் மகனுமான ஆதி சாய்குமார், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கவுள்ளார். சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!