ஒவ்வொரு கேரக்டரும் எனக்கு சவால்தான் : நிமிஷா சஜயன்
செப் 08, 2026
Advertisement
மலையாள திரைப்பட எழுத்தாளர் சஜீவ் பழுர் இயக்கி உள்ள தமிழ் படம் "என்ன விலை". இதில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்துள்ளனர். ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். வருகிற 17ம் தேதி வெளிவருகிறது.
படத்தில் நடித்திருப்பது குறித்து நிமிஷா சஜயன் கூறியதாவது : ஒவ்வொரு படமும் எனக்கு சவாலானது தான். படத்தின் கதை நன்றாக இருக்கிறதா. படத்தின் கதை நாயகனுக்கு சரிசமமான வாய்ப்பு நமக்கும் இருக்கிறதா என்பதை பார்த்துதான் படங்களை தேர்வு செய்கிறேன். அப்படி தேர்வு செய்து விட்டால் அதற்காக எதுவும் செய்வேன். ஹிந்தியில் வெளிவந்திருக்கும் "பபிதா சிங் ரிப்போர்ட்டிங்". படத்திற்காக 14 கிலோ எடை கூடினேன். இப்போது கஷ்டப்பட்டு குறைத்திருக்கிறேன்.
"என்ன விலை" படத்தின் இயக்குனர் எனது முதல் படத்தின் எழுத்தாளர் அப்போது முதலே அவர் எனது நண்பர். என்ன விலை படத்தின் கதையை சொன்னதுமே ஒப்புக் கொண்டேன். இது ஒரு கோர்ட் டிராமா கதை. ஒரு எளிய மனிதனுக்காக சட்டப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் சவால் மொழிதான். எனக்கு தமிழ் பேசத் தெரியும் ஆனால் கோர்ட்டில் பேசும் அளவிற்கு சரமளமாக பேசத் தெரியாது. டப்பிங் ஏற்பாடு செய்யலாம் என்றார்கள். நான் மறுத்து விட்டேன்.
ஸ்கிரிப்டை வாங்கி இரவு பகலாக விழித்திருந்து வசனங்களை மனப்பாடம் செய்ததோடு பேசியும் பழகினேன். படப்பிடிப்பில் ஒரு சில திருத்தங்கள் இருந்து ஆனாலும் நானே பேசி நடித்தேன். ஹிந்தி படத்தில் உடல் எடை சவால், இந்த படத்தில் மொழி சவால். இரண்டையும் கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறேன்.
தற்போது அசோக் செல்வனுடன் ஒரு படத்திலும், மாதவனுடன் "லெகசி" என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறேன். மலையாளம், தமிழ், ஹிந்தி மொழிகளில் நடித்து விட்டேன். மற்ற மொழிகளையும் எதிர்பார்க்கிறேன். நல்ல கதைகளோடு வருகிறவர்களுக்காக நான் காத்திருக்கிறேன் என்கிறார் நிமிஷா சஜயன்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!