சரித்திரப் படத்திற்குத் தயாராகும் சசிகுமார்
ஏப் 25, 2025
Advertisement
"சுப்பிரமணியபுரம்" படம் மூலம் தனது முதல் படத்திலேயே அழுத்தமான தடத்தைப் பதிவு செய்தவர் சசிகுமார். இயக்குனர், நடிகராக அவர் அறிமுகமான அந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பின் "ஈசன்" படத்தை மட்டும் அவர் இயக்கினார். அந்தப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் அவர் இயக்கவில்லை. நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
கமர்ஷியல் படங்களிலும், மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்துள்ள "டூரிஸ்ட் பேமிலி" படம் அடுத்த வாரம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. அப்படம் தவிர இன்னும் நான்கைந்து படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் அவர் உள்ளாராம். சரித்திர கால படம் ஒன்றிற்கான கதை, திரைக்கதை பணிகளை முடித்துள்ள சசிகுமார், அதில் முன்னணி நடிகர்கள் நடிக்கவும் வாய்ப்புள்ளதாம்.
விரைவில் அந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!