
சப்தம் படத்தின் டப்பிங் பணி தொடங்கியது
ஜூலை 15, 2023
Advertisement
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் சப்தம். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதற்கு முன்பு இந்த கூட்டணியில் வெளிவந்த ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லட்சுமி மேனன், சிம்ரன், லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் அறிவழகனின் ஆல்பா பிரேம்ஸ் மற்றும் 7G பிலிம்ஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!