மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன்
ஜன 25, 2021
Advertisement
தமிழில் இருந்து சென்ற நடன இயக்குனர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் எல்லோரும் மலையாள திரைப்படங்களில் கோலோச்சி வரும் நிலையில், தமிழ் இசையமைப்பாளர்களின்(ஒரு சிலரை தவிர) கவனம் மட்டும் மலையாள திரையுலகம் பக்கம் திரும்பவே இல்லை. இந்தநிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது, முதன்முதலாக "அன்வேஷிப்பின் கண்டெத்தும்" (விசாரித்தால் கண்டறியலாம்) என்கிற மலையாள படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்ற, தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான நடிகர் டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த கதையின் தன்மைக்கு சந்தோஷ் நாராயணன் போன்ற ஒருவர் இசையமைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என இந்தப்படத்தின் அறிமுக இயக்குனர் டார்வின் குரியாகோஷ், விரும்பியே அவரை தேர்வு செய்துள்ளாராம்..

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!