
பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர்
இவர் தான் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்திற்கு இசையமைத்தவர். அதுமட்டுமல்ல, அதற்கு முன்னதாக தமிழிலும் மலையாளத்திலும் வெளியான நேரம் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.. நேரம் படத்தில் பாபி சிம்ஹாவும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நட்பின் அடிப்படையில் தான், தனது சொந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசனை இசையமைக்க வைத்துள்ளார் பாபி சிம்ஹா. இந்தப்படத்தில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். அதை முன்னிட்டு நாளை (ஜன-26ஆம் தேதி) "ரேஜ் ஆப் ருத்ரா" என்கிற பெயரில் டீசர் ஒன்றை வெளியிட இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!