சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி
மே 16, 2026
Advertisement
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்யை பல நடிகர், நடிகைகள் வாழ்த்தி வரவேற்றனர். சிலரது பதிவுகளைப் பார்த்தால் அவர்கள் விஜய்யின் தவெக கட்சியில் சேர்ந்துவிட்டார்களோ என்று கூட நினைக்கத் தோன்றியது. அப்படி விஜய் பற்றி அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை சனம் ஷெட்டி.
தேர்தலுக்கு முன்பிருந்து கூட அவர் விஜய்யின் தவெக பற்றி நிறைய பதிவுகளைப் போட்டு வருபவர். "இவர்தான் சிஎம்" என தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு கூட ஒரு பதிவு போட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் பதிவிட்ட ஒரு பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நடிகர்கள், நடிகைகள் அவர்களது சம்பளத்தை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆனால், சனம் ஷெட்டி அவருடைய சம்பளம் 12 லட்சம்தான் என்று சொல்லியிருக்கிறார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைய உள்ள படத்தில் நாயகியாக நடிக்க வைக்க த்ரிஷாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்குத்தான் சனம் ஷெட்டி அவரது சம்பளம் பற்றி பதில் கமெண்ட் செய்திருக்கிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!