
சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்
படம் பற்றிய இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியதாவது: ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா, அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் சொந்த பந்தங்களே தடுக்கிறது. கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும், இவர்கள் எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது. இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் சாராம்சம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!