
காத்துவாக்குல ரெண்டு காதல் : வருத்தத்தில் சமந்தா
மே 02, 2022
Advertisement
தற்போது சமந்தா தெலுங்கில் சிவ நிர்வாண இயக்கத்தில் விஜய தேவர கொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் இப்படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. அதோடு தெலுங்கு படப்பிடிப்புக்காக நான் காஷ்மீரில் இருப்பதால் தன்னால் காத்துவாக்குல ரெண்டு காதல் பட குழுவினருடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்ல முடியாமல் போனது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!