சலார் - டீசர் பார்வைகளைக் கடந்த டிரைலர்
டிச 05, 2023
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்துள்ள "சலார்" படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு ஐந்து மொழிகளில் வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளை அந்த டிரைலர்கள் கடந்தது. தற்போது 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன.
"சலார்" டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆங்கில வசனம் பேசும் கதாபாத்திரம் ஒன்றுடன் பிரபாஸ் கடைசியில் அதிரடி காட்டும் அந்த டீசர் ஒரே ஒரு வெர்ஷனில் மட்டுமே வெளியானது. அதற்கு 144 மில்லியன் பார்வைகள் இதுவரை கிடைத்துள்ளன. அந்த டீசரின் பார்வையை தற்போது டிரைலரின் பார்வை கடந்துள்ளது.
"சலார்" படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ளது. அதற்குள் படக்குழுவினர் எப்படி பான் இந்தியா புரமோஷன்களை முடிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!