துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன்
டிச 20, 2024
Advertisement
துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛லக்கி பாஸ்கர்" படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து ‛ஆர்.டி.எக்ஸ்" பட இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து, கதாநாயகனாக மலையாளத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். மேலும், கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். ஏற்கனவே துல்கர் சல்மான், பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…