‛புஷ்பா 2 முன்னோட்ட வீடியோவிற்கே ரூ.4 கோடி செலவு?
ஏப் 10, 2023
Advertisement
கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற "புஷ்பா" படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக சிலர் நடிக்கிறார்கள். அவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி சில நாட்களுக்கு முன்பு புஷ்பா இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் "புஷ்பா எங்கே" என்கிற கான்செப்ட்டில் உருவான இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் முன்னோட்டம் வெளியானது. இந்த முன்னோட்ட உருவாக்கம் மற்றும் வெளியீட்டுக்கு மட்டும் 4 கோடி ரூபாய் தயாரிப்பு நிறுவனம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவீஸ் நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாரித்து வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!