
ஓடிடிக்கு வந்த ஆர்ஆர்ஆர் : மே 20ல் வெளிவருகிறது
மே 14, 2022
Advertisement
பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் நடித்த படம் ஆர்ஆர்ஆர். கடந்த மார்ச் 25ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. பாகுபலி அளவிற்கு படம் பேசப்படவில்லை என்றாலும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை கொடுத்தது. படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளத்திற்கு வந்துள்ளது. வருகிற மே 20ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் காணலாம். இதில் முக்கிய அம்சமாக 4கே ஒளி தரத்திலும், டால்பி அட்மாஸ் ஒலி தரத்திலும் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!