அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன ரவுடி ஜனார்த்தனா
செப் 04, 2026
Advertisement
கிங்டம் படத்திற்கு பிறகு ரணபலி, ரவுடி ஜனார்த்தனா என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இவற்றில் ரணபலி படம் தசரா பண்டிகையின்போது வெளியாகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இதுதவிர, அவர் நடித்துள்ள ரவுடி ஜனார்த்தனா படத்தை தெலுங்கில் ராஜா வாரு ராணி காரு படம் மூலம் புகழ்பெற்ற ரவி கிரண் கோலா இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படம் கிராமத்து கதையில் உருவாகிறது.
இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ரவுடி ஜனார்த்தனா 2027ம் ஆண்டு கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ரணபலி படப்பிடிப்பை முடித்த பிறகு, ரவுடி ஜனார்த்தனா படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணையவுள்ளார். இப்படம் கோதாவரி பகுதியின் பின்னணி கதையில் அமைக்கப்பட்டுள்ளது. தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!