
ரோஸ் வேண்டுமா?, சாக்லேட் வேண்டுமா? - பூஜா கேள்வி
அவருக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். "பீஸ்ட்" படம் வரும் போது அது இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பூஜா பதிவுகளுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள். இன்ஸ்டாவில் அவர் எப்போது புகைப்படங்களைப் பதிவிடுவார் என ஒரு கூட்டமே காத்திருக்கிறது. நேற்று இரவு அசத்தலான சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
கையில் ரோஜாப் பூ ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தையும், அவர் வெட்கப்படும் சில புகைப்படங்களையும் பதிவிட்டு, “ரோஜா வேண்டுமா, சாக்லேட் வேண்டுமா, ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்,” என்று கேட்டுள்ளார். ஆனால், புகைப்படத்தில் சாக்லேட்டே இல்லையே எனத் தேடிப் பார்த்தால்.......தன்னைத்தான் அவர் "சாக்லேட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாக்லேட் பிடிக்காத ரசிகர்களும் இருப்பார்களா என்ன ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!