
ரெட்ட தல படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
ஜூன் 08, 2024
Advertisement
மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக "ரெட்ட தல" என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இதனை பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர் . கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இதானி ஆகியோர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். காதல், ஆக் ஷன் கலந்த படமாக தயாராகிறது. அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தை அறிவித்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை துவங்கி நடத்தி வந்தனர். இப்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!