
காத்து வாக்குல ரெண்டு காதலை வாங்கிய உதயநிதி
பிப் 23, 2022
Advertisement
நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்தும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடன இயக்குர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!