
அம்மா ஆனார் ரெபா மோனிகா
"ஜேக்கப்பிண்ட சுவராஜ்யம்" என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான். "ஜருகண்டி" படத்தின் மூலம் தமிழக்கு வந்த அவர் விஜய் நடித்த "பிகில்" படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு "எப்ஐஆர், மழையில் நனைகிறேன், கூலி" உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான "ஜனநாயகன்" படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, ஜோமோன் ஜோசப் என்ற தொழில் அதிபரை காதலித்து 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்போது ரெபா மோனிகா ஜான் கடந்த 22ம் தேதி பெண் குழந்தை பெற்றுக் கொண்டார். குழந்தைக்கு "கியாரா ஜோசப்" என்று பெயர் வைத்துள்ளார். இதனை தனது இன்ஸ்ட்ராகிராமில் ரெபா மோனிகா பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!