உலகப் புகழ்பெற்ற மேடையில் ராஷ்மிகா
ஏப் 29, 2026
Advertisement
டோக்கியோவில் வருகிற மே மாதம் 23ஆம் தேதி அன்று நடைபெறும் குளோபல் அனிமே விருதுகள் 2026 விழாவில் கலந்து கொள்கிறார் ராஷ்மிகா மந்தனா. இதன் மூலம், மீண்டும் ஒருமுறை உலக அளவில் ஒரு வலுவான தாக்கத்தை அவர் ஏற்படுத்த போகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராஷ்மிகா, இப்போது தொகுப்பாளர்களில் ஒருவராக ஒரு பெரிய பொறுப்பில் மீண்டும் தோன்றப் போகிறார்.
அனிமேவில் சிறந்து விளங்குபவர்களை கொண்டாடும் இந்த நிகழ்வில் உலகளாவிய பாப் நட்சத்திரமான தி வீக்கெண்ட் உள்ளிட்ட சர்வதேச திறமையாளர்கள் இடம் பெறுகிறார்கள். இது போன்ற புகழ்பெற்ற கலைஞர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வது ஜப்பான் மட்டுமின்றி உலக அளவில் ராஷ்மிகாவின் புகழை இன்னும் பெரிய அளவில் உயர்த்தும் என்று கூறப்படுகிறது. அதோடு, புஷ்பா- 2 படத்திற்காக ஜப்பானில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்தே ராஷ்மிகாவுக்கென்று அங்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!