
மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்
அவர் கடைசியாக தமிழில் நடித்த "ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்" படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து மலையாளப் படத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார் ரம்யா. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் "நண்பகல் நேரத்து மயக்கம்" என்ற படத்தில் ரம்யா நடிக்கிறார்.
இப்படம் குறித்து, “எனது அடுத்த புரொஜக்ட் மலையாளத்தில் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. விமர்சன ரீதியாக பெயர் பெற்ற, அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி சாருடன் நடிப்பதன் மூலம் கனவு நனவாகிறது. தேனி ஈஸ்வர் சாருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி,” என மலையாளப் படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ரம்யா.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…