
வித்யாபாலனுக்கு நன்றி சொன்ன ரகுல் பிரீத் சிங்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வித்யாபாலன்.. நம்மை நாமே சுயமாக நேசிக்க வேண்டும் என நீங்கள் சொன்ன வார்த்தைகள், எனக்குள் எந்த அளவுக்கு ஆழமான விதையை விதைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.. நம்மில் பலர் நம்மிடமுள்ள அம்சங்கள் குறித்து சங்கடப்படுவோம்.. சிலவற்றை வெறுக்கவும் செய்வோம். அதனால் வெறுப்பவற்றில் அதிகம் எதிர்மறை கவனத்தைச் செலுத்துவோம். ஆனால் நீங்கள் என்னை யோசிக்கவும், சுயபரிசோதனை செய்துகொள்ளவும் வைத்துவிட்டீர்கள். நான் இப்போது என்னுடைய புரொபைலை கூட நேசிக்க ஆரம்பித்து விட்டேன். அதற்கு காரணம் நீங்கள்தான்.. நன்றி.. பெண்கள் சக்தி” என்று அதில் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!