
கங்குபாய் கத்தியவாடி தமிழ் ரீமேக்கில் நடிக்க விரும்பும் வாணிபோஜன்
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வாணி போஜன் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்களாக கதைகளையும் கதாபாத்திரங்களையும் நன்கு கவனித்த பின்னரே, தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். ஹிந்தியில் ஆலியா பட் நடிப்பில் வெளியான, கங்குபாய் கத்தியவாடி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்தது. அந்த படம் தமிழில் ரீமேக் ஆனால் கங்குபாய் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் நடிப்பை பொருத்தவரை, நயன்தாரா கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் விதம் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும், அதே பாதையில் அவரை முன் மாதிரியாக கொண்டு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார் வாணி போஜன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!