‛ராட்சசன் பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
செப் 09, 2024
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானது ஆக்சிஸ் பிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. 2015-ம் ஆண்டில் வெளிவந்த "உறுமீன்" படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து "மரகத நாணயம்", "இரவுக்கு ஆயிரம் கண்கள்", "ராட்சசன்", "ஓ மை கடவுளே", "பேச்சிலர்", "கள்வன்" உள்ளிட்ட பல வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படங்களை தயாரித்தார்.
சில மாதங்களாக இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நள்ளிரவில்(செப்., 9) சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
டில்லி பாபு இப்போதும் கூட தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க சில இயக்குனர்களுடன் ஒப்பந்தம் போட்டு வந்தார். இதுதவிர தனது மகவ் தேவ்வை ஹீரோவாக்கி "வளையம்" என்ற பெயரில் ஒரு படத்தினை தயாரித்து வந்தார். மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது அவரது கனவும். ஆனால் அந்த கனவு முழுமை அடையும் முன்பே அவர் மறைந்துவிட்டார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!