
நடிகர் ரஜினிகாந்த் டில்லி பயணம்
ஆக 06, 2022
Advertisement
‛அண்ணாத்த" படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் 169வது படம் ‛ஜெயிலர்". ‛பீஸ்ட்" படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடப்பதால் படத்தை திட்டமிட்டு முடிக்க முடியுமா என தெரியவில்லை. இதனால் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த எண்ணி உள்ளனர். இதற்கான ஜெயிலர் படக்குழு டில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென டில்லி சென்றுள்ளார். ‛ஜெயிலர்" படம் தொடர்பான பணிகளை ரஜினியே நேரில் சென்று பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!