
மிராய் டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த்
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஞ்சு மனோஜ், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் இளைய மகன். ரஜினியின் நெருங்கிய நண்பராக மோகன்பாபு இருந்தாலும், அவருக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே சொத்து விவகாரத்தில் தகராறு உள்ளது. இருந்தாலும் மஞ்சு மனோஜ் நடித்துள்ள "மிராய்" படத்தின் டிரைலரைப் பார்த்து ரஜினி பாராட்டியுள்ளார்.
இது குறித்து மஞ்சு மனோஜ் எக்ஸ் தளத்தில், “மிராய் டிரைலரை பார்த்து எங்களை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார்ந்த நன்றி. அன்பு சகோதரர் சிவகார்த்திகேயனின் மதராசி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக மக்களுக்கும், ஊடக நன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!