ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது
ஜூன் 03, 2025
Advertisement
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் "ராஜா சாப்" எனும் படம் உருவாகி வருகிறது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். தமன் இசையமைக்க, பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ், திகில் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. முதன்முறையாக இப்படியொரு படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.
இப்படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகுவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தினால் இத்திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து தள்ளி ஒரு சில மாதங்கள் கழித்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜா சாப் திரைப்படம் இவ்வருட இறுதியில் டிசம்பர் 05ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் ஜுன் 16ல் வெளியிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக "தி ராஜா சாப்" வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!