
ஜீவாவின் தகப்பன் படப்பிடிப்பு நிறைவு
"பிளாக், தலைவர் தம்பி தலைமையில்" படங்களை தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் "ஜாலியா இருந்த ஒருத்தன்" படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் ஜீவா. விரைவில் ரிலீசாகிறது. அடுத்ததாக "கிடா" படத்தின் இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வந்தார். இப்படத்திற்கு "தகப்பன்" என தலைப்பிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கின்றார். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
மதுரையை மையமாக கொண்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அதன் சுற்றுவட்டாரங்களில் நடந்துவந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். டிசம்பரில் படம் ரிலீசாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!