
சித்தார்த் நடிக்க இருந்த டிசி லோகேஷ் கனகராஜ் வசம் வந்தது எப்படி?
சமீபத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த "டிசி" திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 100 கோடி வசூலித்து திரையுலகையும் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கத்தில் இருந்தது என்றும், அப்போது இதில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்க இருந்தார் என்றும் "டிசி" படத்தின் ஒளிப்பதிவாளர் முகேஷ் ஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "பத்து ஆண்டுகளுக்கு முன்பு "டிசி" முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அப்போது பல ஹீரோக்கள் இப்படத்தில் நடிக்க விரும்பினர். அந்தச் சமயத்தில் இப்படத்தைத் தொடங்குவதற்கு நடிகர் சித்தார்த் தான் எங்கள் இறுதித் தேர்வாக இருந்தார், அப்போதைய கதை ஒரு கேங்ஸ்டரை மையமாகக் கொண்டிருந்தாலும், அதை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பலரும் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர், அதனால் அந்தத் திட்டம் அப்போது தற்காலிகமாக நின்று போனது" என்று கூறியுள்ளார்,




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!