ரஷ்யாவில் புஷ்பா படக்குழு
டிச 01, 2022
Advertisement
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளியான தெலுங்குப் படம் "புஷ்பா". பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் சுமார் ரூ.300 கோடி வரை வசூலித்தது.
அப்படத்தைத் தற்போது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து அடுத்த வாரம் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். இன்றும், நாளையும் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் படத்திற்கான பிரிமீயர் காட்சிகள் நடைபெற உள்ளன.
இதற்காக புஷ்பா படக்குழுவினர் ரஷியா சென்றுள்ளனர். அங்கு நேற்றே தங்களது பிரமோஷன் பேட்டிகளை ஆரம்பித்துவிட்டனர். இயக்குனர் சுகுமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் அதில் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…