
தமிழில் இன்று கோல்டு வெளியாகாதது ஏன்?
காலை 8 மணிக்கு மலையாள மொழிக் காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவையும் ரத்து செய்யப்பட்டன. காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. மலையாளத்தில் மட்டும் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழில் நாளை வெளியாகும் எனத் தெரிகிறது. ஆன்லைன் டிக்கெட் பதிவு இணையதளங்களில் தமிழ் பதிப்பிற்கான இன்றைய முன்பதிவையும் ரத்து செய்துவிட்டனர்.
இப்படத்தின் தமிழக உரிமையை கோவை சுப்பையா என்ற வினியோகஸ்தர் சுமார் 1 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம். சிம்பு நடித்த "மாநாடு" படத்தின் தமிழக வெளியீட்டை செய்தவர் அவர்தான். இன்று படம் தமிழில் வெளியாகாத நிலையில் மலையாளப் படத்திற்கான விமர்சனம் மற்றும் வரவேற்பைப் பொறுத்தே நாளை வெளியாக உள்ள தமிழ்ப் பதிப்பிற்கான வரவேற்பும் இருக்கும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!