
தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி
இதில் ஒரு படத்தை ரேணிகுண்டா, வயது 18 படங்களை இயக்கிய பன்னீர் செல்வமும், ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இன்னொரு படத்தையும் இயக்குகிறார்கள்.
"என்.எப்.டி.சிக்கு 2 படங்களை இயக்குகிறோம். நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதமும் நடந்து வருகிறது” என்கிறார் லிங்குசாமி.
ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் 5 படங்களைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனங்களுடன் இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி என்ற அமைப்பும் இணைந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!