பிளாஷ்பேக் : முதன் முதலாக 3 வேடங்களில் நடித்த சின்னப்பா
மே 20, 2025
Advertisement
கமர்ஷியல் படங்களில் அந்தக் காலத்திலேயே பல புதுமைகைளை புகுத்திய முன்னோடி பி.யு.சின்னப்பா. முதன் முதலாக "உத்தமபுத்திரன்" படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் 9 வேடங்களில் ஒரே பிரேமில் தோன்றினார். இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.
இந்த வரிசையில் அவர் அப்பா, மகன், பேரன் என 3 வேடங்களில் நடித்த படம் "மங்கையர்கரசி". இந்த படத்தை மேற்கு வங்க இயக்குனர் ஜிதின் பட்டர்ஜி இயக்கினார். சின்னப்பா ஜோடியாக கண்ணாம்பா டைட்டில் கேரக்டரில் நடித்தார். இவர்களுடன் அஞ்சலி தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஜி.ராமநாதன், குன்னக்குடி வைத்தியநாத அய்யர், சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோர் இசை அமைத்திருந்தனர். பாக்யா பிக்சர்ஸ் சார்பில் நாகூர் அஹமது தயாரித்திருந்தார். இந்த படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனும் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!