
தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
மே 17, 2026
Advertisement
தயாரிப்பாளர் கே.ராஜன், "பிரம்மச்சாரிகள்" (1983) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது திரைவாழ்க்கையைத் துவங்கினார். 1991இல், நிழல்கள் ரவி மற்றும் சரத்குமார் நடித்த "நம்ம ஊரு மாரியம்மா" திரைப்படத்தை இயக்கிய அவர் , இயக்குனர் செந்தில்நாதனுக்காக "தங்கமான தங்கச்சி" படத்திற்கு எழுத்தாளராகப் பணியாற்றினார்.
சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். சமீப ஆண்டுகளாக சினிமா விழா, பொது மேடைகளில் தமிழ் சினிமா குறித்து அவ்வபோது துணிச்சலாக பேசி வந்தார். சிறிய பட்ஜெட் படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர், பெரிய நடிகர்களின் சம்பளம் குறித்தும் விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று (மே 17) மாலை சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு வயது 85. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!