
சண்டைக் காட்சியில் நடித்தபோது பாலகிருஷ்ணாவிற்கு காயம்
ஒரு ஆக் ஷன் காட்சியைப் படமாக்கும்போது, பாலகிருஷ்ணாவிற்கு லேசான தசைநார் கிழிந்துள்ளது. அதையடுத்து மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, அவர் விரைவில் முழுமையாகக் குணமடைவதற்காக சிறிய அளவிலான அறுவை சிகிச்சை முறையை மேற்கொள்ளவுள்ளார். இது சாதாரணமான ஒரு சிகிச்சை முறை என்பதால் கவலைப்பட ஏதுமில்லை.
இந்த செய்தி வெளியானதை அடுத்து பாலகிருஷ்னாவின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பிற்குத் திரும்ப வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
காஜல் அகர்வால், சஞ்சய் தத் என பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் பாலகிருஷ்ணாவின் இந்த 111-வது படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!