
ஹீரோயினை மோசமான வார்த்தையால் திட்டிய கஞ்சா கருப்பு: மேடையில் பரபரப்பு
இந்நிலையில் இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓங்காரம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர் மோகன் ஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கஞ்சா கருப்பு படம் வெற்றி அடையும் என்று பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக இவர் அப்பாடத்தின் ஹீரோயினை தகாத வார்த்தையில் திட்டி பேசினார். இந்த பட இசை வெளியீட்டு விழாவிற்கு வர ஹீரோயின் ஒரு லட்சம் கேட்டதாக கூறினார். அதை கொடுக்க முடியாத காரணத்தினால் இந்த விழாவிற்கு அவர் வரவில்லை என்று கூறிய கஞ்சா கருப்பு சில தகாத வார்த்தைகளையும் குறிப்பிட்டும் பேசினார். மேலும், இந்த விழாவிற்கு வந்திருந்தால் நிறைய பட வாய்ப்பு கிடைத்திருக்கும் அதை அவர் தவற விட்டு விட்டார் என்றார். கஞ்சா கருப்புவின் இந்த மோசமான பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!