
மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன்
நவ 21, 2025
Advertisement
நடிகை பிரியங்கா மோகன் கன்னட சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இந்தாண்டு பவன் கல்யாண் உடன் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‛ஓஜி" படம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு "666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்" என்ற படத்தின் மூலம் மீண்டும் கன்னட மொழி படத்தில் நடிக்கிறார். பிரியங்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஹேமந்த் ராவ் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக சிவராஜ் குமார் நடிக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!