
மறைந்த தேவா குடும்பத்தினருக்கு சூர்யா ஆறுதல்
இசையமைப்பாளர் தேவா, கடந்த சனிக்கிழமை அன்று அக்., 17ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பலர் இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து ஞாயிறு அன்று தேவாவின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேவா மறைந்த சமயத்தில் நடிகர் சூர்யா வெளியூரில் இருந்தார். இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதேசமயம் சூர்யாவின் தந்தை, நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சென்னை வந்த சூர்யா, தேவாவின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தேவாவின் மகன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
சூர்யா ஹீரோவாக அறிமுகமான ‛நேருக்கு நேர்" படத்திற்கு இசையமைப்பாளர் தேவா தான் இசையமைத்து இருந்தார். தொடர்ந்து அவரின் ஓரிரு படங்களுக்கு தேவா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!