
வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ்
நாகேஸ்வரராவ் குடும்பத்தினர் "அன்னபூரணா ஸ்டுடியோஸ்", ராமா நாயுடு குடும்பத்தினர் "ராமா நாயுடு ஸ்டுடியோஸ்" ஆகியவற்றை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். இப்போதும் அந்த ஸ்டுடியோக்கள் செயல்பட்டு வருகின்றன. அவரவரர் வாரிசுகள் அந்த ஸ்டுடியோக்களை நிர்வகித்து வருகிறார்கள்.
இதனிடையே, ஹைதராபாத் மாநகராட்சிக்கு உரிய வணிக வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக அந்த இரண்டு ஸ்டுடியோக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 1,92,000 சதுர அடியில் இருக்கும் அன்னபூரணா ஸ்டுடியோஸ் நிர்வாகம், 81,000 சதுர அடிக்கு மட்டும் வரி செலுத்துகிறார்களாம். 11 லட்சம் செலுத்த வேண்டிய வரிக்கு 49,000 மட்டுமே செலுத்தி வருகிறார்களாம். அது போல, ராமா நாயுடு ஸ்டுடியோஸ் நிர்வாகம் 2,73,000 வரிக்குப் பதிலாக, 76,000 மட்டுமே செலுத்தி வருகிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!